Ad Widget

ஒக்டோபர் 21இல் வடமாகாணத்தில் ஆரம்பப் பாடசாலைகள், முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான பணிகள் நிறைவு!!

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளது என்று மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அன்றைய தினமே முன்பள்ளிகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை 200 மாணவர்களுக்கு உள்பட்ட ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மாதங்களின் பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சங்கடங்கள் எவையுமின்றி பாடசாலைக்கு அனுப்புமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கேட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஆரம்பப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய தர மாணவர்களுக்கும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக மாகாண கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று மாகாண கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

Related Posts