Ad Widget

இலங்கையில் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. SA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவை டெல்டா வகையின் கூர்மையான பிறழ்வுகள் என்றும் இலங்கையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா!!

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “எனக்கும் என் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமையால், நாங்கள் பிசிஆர் சோதனை செய்தோம். அதில் தொற்றுள்ளமை...
Ad Widget

கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன் தொடராக நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோனையில் 13 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பொதுச் சந்தையை தற்காலிகமாக...

மக்களின் பொது நடமாட்டத்தை 80 – 90 சதவீதமாகக் குறைக்கவேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் முறைக்கு வெளியே, தடுப்பூசி...

நாட்டை முடக்காமல் இருக்கும் ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் – சுமந்திரன்

இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். சுகாதாரத் தரப்பினரின் கோரிக்கையைக் கேட்டு நாட்டை உடனடியாக முடக்காது உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். என்று தமிழ்த் தேசியக்...

வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை!!

வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி...

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (65 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பருத்தித்துறை- தும்பளையைச் சேர்ந்த (39 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதேவேளை பருத்தித்துறை- இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த...