Ad Widget

இலங்கையில் முதற்தடவையாக ஒரேநாள் கொரோனா உயிரிழப்பு 50ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த மரணங்கள் கடந்த மே 10ஆம் திகதி முதல் ஜூன் ஏழாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 32 ஆண்களும் 22...

வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இது தொடர்பான வர்த்தமானியினை வெளியிட்டுள்ளார். வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் என்பனவற்றின் கற்றல் கிளைகளில் உயர் கல்வியை வழங்கும், மேம்படுத்தும் அத்துடன் அபிருத்தி செய்யும்...
Ad Widget

பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது, அபராதமும் விதிக்கப்படும் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 120, 286, 286 ஏ, 291 ஏ, 291 பி, 345, 365 டி, 402, 403, மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு...

இலங்கை முதலீட்டு மாநாடு – 2021 இரண்டாவது தின ஆரம்ப நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய உரை

“முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள, இணையத்தினூடாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இதனை காலத்திற்கு உகந்ததொரு நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம். 2006 முதல் 2014 வரையான 9 ஆண்டு காலத்தில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகத்தை நீங்கள்...

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்!!

ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினர் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர். கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் குறித்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினத்தில் அனைத்து வங்கிகளையும் திறந்து...

நுண்கலை கல்லூரி அனுமதிக்கு இணைய வழி வாயிலாக தெரிவுப் பரீட்சை!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி...

நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். இந்த மாதம் 10 ஆம் திகதி,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன்...

யாழில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளடங்களாக 5 குழந்தைகளுக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 12நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை...

கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய பரிந்துரைகளின்படி, பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் இராணுவத்...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் சாவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் இரண்டு நாள்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கோவிட்-19 சிகிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர்...

வடமராட்சியில் இருவர் உயிர்மாய்ப்பு!!

கோவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2...

பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? – இராணுவத் தளபதி

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும்...

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சர்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். மேலும் ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை...

தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானம்!!

பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அதன்படி, கொமர்சியல், சம்பத், செலான், DFCC, நேஷன் டிரஸ்ட், அமானா...

போக்குவரத்து கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி நீக்குவது பொருத்தமான தீர்மானமல்ல – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை என்பன குறைவடையவில்லை. அதற்கமைய முழுநேர போக்குவரத்தை கட்டுப்பாட்டின் பயனை நாம் பெறவில்லை. எனவே 14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமானதல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும்...

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி...

சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள்!!

யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு...

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளது!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, ‘யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் 92 பேருக்கு கொரோனா வைரஸ்...

நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. உலகில் 2 லட்சம. கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட 78ஆவது நாடாக இலங்கை காணப்படுகிறது. அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டில் இன்று மாலை வரை 2 ஆயிரத்து 280 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜனவரி...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு...
Loading posts...

All posts loaded

No more posts