. June 29, 2021 – Jaffna Journal

இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இணைய வழியில் கற்றலை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் துறைசார் தரப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.... Read more »

யாழில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்- இளைஞன் படுகாயம்

அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த குழுவொன்று, அங்கிருந்த இளைஞன் மீது வாள் வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த இளைஞன், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். மேலும் இந்த வாள்வெட்டுக் குழு, வீட்டிலிருந்த பொருட்களையும்... Read more »

கொரோனா வைரஸின் டெல்டா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம்

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த மூவரும் தற்போது கந்தக்காடு இடைத்தங்கல் மத்திய நிலையத்தில்... Read more »

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை என சுமந்திரனால் கூறப்பட்ட நபர் சீன பிரஜை அல்ல!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சீன பிரஜை ஒருவர் பருத்தித்துறை- மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கூறிய நபர் சீன பிரஜை அல்ல. படத்தில் காட்டப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் MOHOMAD MUSTAFA MOHOMAD HANIFA குடத்தனையில் தமிழ் பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.... Read more »

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல... Read more »

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற... Read more »

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது,... Read more »

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!!

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் நேற்று (28) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி “நாய்” என... Read more »

உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். Read more »

ஒரே குடும்பத்தில் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு – விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தல்

பேராதனை முருத்தலாவவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தமை குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற இறப்புகளைத் தடுக்க, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து சுகாதார பிரிவுகள்... Read more »

யாழ்ப்பாணத்தில் நேற்று 9,988 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் பணியில் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ்ப்பாணம்... Read more »

யாழில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் மீது தாக்குதல்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு – கொடுக்கிளாய் பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) என்ற பெண்ணின் மீதே இவ்வாறு தாக்குதல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று... Read more »