Ad Widget

இணையவழிக் கற்றல் விருத்தி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இணைய வழியில் கற்றலை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் துறைசார் தரப்பினரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த அதிகாரிகள் எதிர்கெபாள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்புக்களுடன் பேசி உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முன்பதாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பாடசாலைகள் அனைத்தம் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் இணைய வழி ஊடாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வறிய மாணவர்கள் அதிகமானோர் இந்த கற்றல் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்த முடியாதுள்ளதாக துறைசார் தரப்பினரிடம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதிலும் குறித்த பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹந்த ராஜபக்ச ஆகியோரது பணிப்பின் பெயரில் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் குறித்த கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குறித்த மின்னியல் சாதனங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts