Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் யாழில் ஆரம்பம் !!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) நினைவேந்தல் அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள்...

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நால்வருக்கு கொரோனா

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களிற்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களில் நால்வருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த வைத்தியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், தொற்று...
Ad Widget

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை மீண்டும் அமுல் – பொலிஸார் முக்கிய அறிவிப்பு

பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கின்ற வேளையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியில் செல்லும் நடைமுறை அமுலாகவுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை நடைமுறைக்கு வருகிறது. எனவே அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 0, 2,4,6,8 ஐ கொண்டவர்கள்...

திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் பயணத் தடை!! புதிய அறிவிப்பு இதோ !!

நாளை (வியாழக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இதவேளை மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவைப் போன்ற குறித்த பயணத் தடை...

நாடு முழுவதும் இன்று முதல் இரவுநேர பயணத்தடை அமுல் – இராணுவ தளபதி

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இரவுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தொடக்கம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே பயணிக்க...

ஆபத்தான கட்டத்தில் நாடு; மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையால் பயனில்லை – கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம்

கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான தொற்றுநோயாளர்களை வெளிப்படுத்தும். மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் போதாது. எங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கோரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை...

கோரோனா வைரஸ் புதிய மாறுபாடுகள் சமூகத்தில் இருக்கக்கூடும் – சுகாதார அதிகாரி எச்சரிக்கை

நாட்டில் புதிய கோவிட்-19 வைரஸ் வகைகள் சமூகத்தில் கண்டறியப்படாமல் இருக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று எச்சரித்தனர். புதிய மாறுபாடுகளைக் கொண்ட நபர்கள் சமூகத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார். இன்று ஒரு இணைய ஊடக மாநாட்டில் பேசிய அவர் தெரிவித்ததாவது;...

மே 18! இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்க அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக...

யாழ்ப்பாணத்தில் 35 பேர் உள்பட வடக்கில் 55 பேர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை (மே 11) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன....

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக நுழைந்து சுதுமலையில் பதுங்கியிருந்தவர் கைது!

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்து யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் பதுங்கியிருந்த நபர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு சுகாதர பிரிவினரின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மன்னார் பகுதிக்குள் நுழைந்த குறித்த நபர் , அங்கிருந்து பேருந்தின் மூலம் யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளார்....

இலங்கையில் கொரோனாவால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவு – பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இரத்மலானை,பிலிமத்தலாவ, பத்தன,தலவாக்கலை, ஹால்கரன்ஓய, எல்கடுவ மெனிக்கின்ன, மாத்தறை, தல்கஸ்வல, மொரன்துடுவ, மஹரகம, ஹல்தொட, வஸ்கடுவ, களனி, மொரட்டுவ மற்றும் பாணந்துறை பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அத்தோடு, மாத்தளையில் 3 மரணங்களும் மடுல்கல பொலன்னறுவை ஆகிய...

ஊரடங்கு குறித்து இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு நாட்டில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அத்தோடு, இந்த விடயம் குறித்து...