- Sunday
- July 6th, 2025

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். அவர்களில் ஊர்காவற்றுறை கடற்தொழிலாளி ஒருவரும் அடங்குவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பூநகரி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து இன்றும் (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக...

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற மன்னார் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து குறித்த மகஜரை கையளித்தனர். கொவிட்...

இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மெசிடோ...

வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 128 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில்...

வடக்கில் மேலும் 9 பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 292 பேரின் மாதிரிகள் பரிசோதனையிலேயே 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர், நவாலியில் கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புடையவர்கள் என்றும் மூவர்...

யாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கைதான தாய்க்கு மனநிலை பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கை சமர்ப்பிக்கவும் குழந்தையின் உடல்நிலை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக...

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம்...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைத்தீவு பகுதியில் இணங்காணப்பட்ட இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட்...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்துகொண்டனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது....

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் பொலிஸாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலையைச் சேர்ந்தவர் வாடகைக்கு வீடு எடுத்து மணியந்தோட்டத்தில் வசிக்கிறார். இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் தாயாரைக்...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையை தடியால் அடித்துத்தும் ஒரு கையைப் பிடித்துத் தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அனைவரின் மனதையும் பதறவைக்கும் அந்த காணொலி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது. தாயார்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலி்ருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 244...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில், பங்கேற்குமாறு மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அதன் செயலாளர், சட்ட வல்லுனர்கள் மற்றும் சுகாதார பரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தின்...

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் நேற்றைய தினம் (28) யாழ் குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற உருளைக்கிழங்கு அறுவடைவிழாவிற்கு பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார். குறிந்த நிகழ்வில் அறுவடைக்கு தயாரான...

இன்றிலிருந்து வெளி மாவட்டத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்தார். நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் மத்திய...

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனான நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்....

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி...

All posts loaded
No more posts