Ad Widget

இரணை தீவில் 3ஆவது நாளாகவும் போராட்டம்!

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்றது. ‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை இரணை மாதா நகர் பகுதியில்...

இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே திரும்பப் பெறவேண்டும்- மாவை

இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து பரவி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்த முஸ்லிம் மக்களின் ஜனசாக்களை எங்கே அடக்கம் செய்வதென்பதில் மேலும் குழப்பமான...
Ad Widget

வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்!!

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துதெரிவித்த கௌரவ...

நல்லூர் ஆலயம் – நாவலர் வீதிவரையான கோயில் வீதி ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக நாளைமறுதினம் மார்ச் 7ஆம் திகதி மணி தொடக்கம் ஒரு மாத காலத்துக்கு இந்தப் போக்குவரத்துத் தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் என...

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ வாரம் இன்று முதல் ஆரம்பம்!

சிவராத்திரி நாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை வருடா வருடம் கடைப்பிடிக்கும் சிவ வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொண்டு பணிகளுக்கு சிவதொண்டர்களையும் சிவமங்கையர்களையும் இணைத்து கொள்ளும் வேலைத்திட்டம் முக்கியமாக இக்கால கட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு குருதிக்கொடை...

பேருந்தில் தவறவிடப்பட்ட பணம் -அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்!

பேருந்தில் தவறவிடப்பட்ட பணம் மற்றும் அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலையின் காப்பாளர் பாலமயூரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் தவறவிடப்பட்ட 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியையும் அவர் மீட்டிருந்தார். அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்....

பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு...

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...