. February 2, 2021 – Jaffna Journal

அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திரதினத்தைப் புறக்கணிப்போம் – சுரேஷ்

இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் தொட்டு இன்றுவரை தமிழ்த் தேசிய இனத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் செயற்படுகின்ற போக்கைக் கண்டித்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தோடு விளையாடும் போக்கைக் கண்டித்தும் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் போக்கைக் கண்டித்தும் இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணிக்க அணிதிரளுமாறு தமிழ்த்... Read more »

LTTE இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்!!

அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்... Read more »

யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணியில்லாத குடும்பங்களை மீளக் குடியமர்த்தல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் 20 பேர்ச் காணித் துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நலன்புரி நிலையங்களில்... Read more »

வடக்கில் நுண்நிதிக் கடனில் சிக்கியுள்ளோருக்கு சலுகைக் கடன்!!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுண்நிதிக் கடனில் சிக்கியுள்ள மக்களுக்கு இலகு கடன் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்வேறு நுண்நிதிக் கடன் முறைகள் மூலம் கடன்களைப் பெற்றுச் சிக்கியுள்ள குறைந்த வருமானமுடைய கிராமிய மக்களை குறித்த கடன்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக கூட்டுறவு... Read more »

இலங்கையில் கொரோனாவால் முதல் மருத்துவரின் மரணம் பதிவு!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய கயான் தந்தநாராயண எனும் குறித்த வைத்தியர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே,... Read more »

மாவை முதலமைச்சர் வேட்பாளரென எந்த தீர்மானமும் எடுக்கவில்லை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த 30ஆம் திகதி... Read more »

கிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்!!

விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம் நேற்று (01) ஆரம்பமானது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை... Read more »

மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று நடைபெற்றது. “எமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு ஏதுவான வகையிலும் எங்களுடைய ஆளுகைக்குட்பட்ட... Read more »

யாழ்.பல்கலை மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளம நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.... Read more »

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவாமாகாணத்திலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி... Read more »

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீள கட்டப்படும் என மாணவர்... Read more »

வடக்கு தொண்டர் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு: தீர்வு கிடைக்கும்வரை போராடவுள்ளதாகத் தெரிவிப்பு!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும்... Read more »

இலங்கையில் 70 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 983ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் 58ஆயிரத்து 75 பேர்... Read more »

இலங்கையில் 60 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!!

இலங்கையில் சுகாதார பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 60,000 பேருக்கு இதுவரை அஸ்ட்ரா ஜெனகா (AstraZeneca) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட எவருக்கும் குறிப்பிடத்தக்களவு ஒவ்வாமை... Read more »