Ad Widget

சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இது குறித்த அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி பாடசாலைகளை மீண்டும் திறக்கும் செயன்முறை குறித்து அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொது சுகாதார...

யாழில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றினை தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் இருந்து குறித்த உணவகம் சுகாதார அதிகாரிகளினால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரும்...
Ad Widget

சித்த வைத்தியத் துறை ரீசேர்ட் தொடர்பில் மாணவர் ஒன்றியத் தலைவர் விளக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்தியத் துறை மாணவர்களின் பாவனைக்கென அந்த துறையின் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ரீசோட்டுகளின் பின் புறத்தில் பல்கலைக்கழக இலட்சினை பொறிக்கப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த கருத்துக்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் துணைவேந்தர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சித்த வைத்தியத் துறை மாணவர் ஒன்றியத்தின் தலைவர்...

கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய 3,772 பேர் ஆசிரியர் சேவையில்

கல்வியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 3,772 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் சேவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை புதிய தவணைக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நியமனக்கடிதங்கள் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா...

எல்லைகளை முடக்கி பரிசோதனை – யாழ் மாவட்ட அரச அதிபர்

யாழ். மாவட்டத்திற்கு நுழையும் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு 1041 குடும்பங்களைச் சேர்ந்த...

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா- நான்கு மாவட்டங்களில் தொற்றாளர்கள்!

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 469 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா பட்டாணி சூர் பகுதியில்...