Ad Widget

மருதனார்மடம் கொத்தணி்; மேலும் 4 வியாபாரிகளுக்கு தொற்று

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரிஆர் முடிவு அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால் இன்று (டிசெ. 15) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவிலைச் சேர்ந்த 2 பேரும் தெல்லிப்பழை, சண்டிலிப்பாயைச் சேர்ந்த...

சமூகமட்டத்தில் கோரோனா கட்டுப்பாடும் மனித உரிமை அணுகுமுறையும் – மருத்துவர் சி.யமுனாநந்தா

கோரோனாத் தொற்று சமூக மட்டத்தில் பரவும்போது கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 30 சதவீதத்தினர் நோய் அறிகுறியற்றவர்களாகக் காணப்படுவர். ஒருவரின் உடலில் நோய்க்கிருமித் தொற்று இருப்பின் மூன்று வாரம் வரை ஏனையவர்களுக்குத் தொற்ற வாய்ப்பு உள்ளது. கோரோனாத் தொற்றுத் தொடர்பாக நோய் அறிகுறி, தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். சமூகத்தில் எழுந்தமானமாக யாரிடமும் பரிசோதனை மேற்கொள்ள...
Ad Widget

யாழில் வெடிவிபத்தில் 8 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் டைனமற் தயாரிக்கும் நோக்கில் ரி.என்.ரி. வெடிபொருளைத் தூளாக்க மீனவர் ஒருவர் முயன்றுள்ளார். எனினும் வெடிபொருள் கல்லுத்தன்மையாக காணப்பட்டுள்ளது. இதனால் அந்த வெடிபொருளை வீட்டில் இருந்த கிரைண்டரில் போட்டு குறித்த மீனவர் அரைத்துள்ளார்....

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

மூடப்பட்டிருக்கும் உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமெந்து கூட்டுத்தாபனத்தை பார்வையிட சென்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை ஆராய்ந்தனர். தேசிய வருமானத்திற்கு பங்களிக்க கூடிய, தற்போது மூடப்பட்டுள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ´செழிப்பு பார்வை கொள்கை...

இணையத்தில் வரும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் – அரசு அறிவுரை

கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு நன்மை பயக்கும் என்று கூறி, உள்நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களுடன் இணையத்தில் புழக்கத்தில் இருக்கும் பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சுதேச வைத்திய ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு பொதுமக்களை கேட்டுள்ளது. இதுதொடர்பில் சுதேச வைத்திய மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து...

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு!

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருதனார்மடம்...

மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 39ஆக உயர்வு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கடற்படைத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எட்டுப் பேருக்கு...

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது – மாவை

இலங்கைத் தமிழ் மீனவர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது, முன்னாள்...