Ad Widget

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லை!!

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால் அதனை பாதுகாப்பு அமைச்சுக் கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறு கங்கேசன்துறைக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் தனது பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பருத்தித்துறை,...

யாழ்ப்பாணத்தை 24 மணிநேரத்தில் சூறாவளி தாக்கும் அபாயம்!! : வளிமண்டல திணைக்களம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளி தாக்கும் அபாயம் காணப்படுவதாக யாழ். பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும், கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்....
Ad Widget

கொரோனா கொத்தணிகள் நாடு முழுவதும் உருவாகும் அபாயம் : சுகாதாரப்பிரிவு

கொரோனா கொத்தணிகள் நாடு முழுவதும் உருவாகும் அபாயம் உள்ளதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார். இந்த நிலையில், அவ்வாறான கொத்தணிகள் உருவாகும் நிலைமையைத் தடுக்கும் பாரிய பொறுப்பு, நிறுவனப் பிரதானிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...

வடமராட்சியில் நினைவேந்தலுக்கு தடை கோரிய விண்ணப்பங்களை மீளப்பெற்றனர் பொலிஸார்

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன. இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி...

கோவிட் -19 தொற்றிலிருந்து யாழ்ப்பாணத்தைக் காப்பாற்ற மக்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து அவசியம் – கட்டளைத் தளபதி

“யாழ்ப்பாணம் மக்கள் சட்டங்கள், சுகாதாரக் கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொள்வதில் சிறந்தவர்கள் என்பதை நான் நேரில் கண்டுகொள்கின்றேன். கோவிட் -19 நோய் தொற்று கட்டுப்பாட்டுகளை யாழ்ப்பாணம் மக்களே சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்” இவ்வாறு யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்த் தொற்று நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின்...

சுமந்திரனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு – மன்னாரில் மாவீரர் தின தடை உத்தரவு நீடிப்பு!

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தினது தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். மன்னார் நீதவான்...

வங்காள விரிகுடாவில் நிவர் புயல்: வடக்கு கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிப்பை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணிநேரத்தில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘நிவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை...

3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி ஆறாம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார விதிமுறைமைகள் பின்பற்றப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர்...

சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்வருக்கு கொரோனா தொற்று இல்லை!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை...

வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தையைச் சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதேபோன்று கொழும்பு 13ஐச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 10ஐச் சேர்ந்த 72 வயது ஆணும் தங்கள் வீடுகளில்...

யாழ் பொலிஸ் அதிகாரி அரசியல்வாதியாக கருத்து தெரிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன் – அங்கஜன் எம்.பி

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ் நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. நேற்று முன்தினம்...

இளம் தொழில்முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம் கௌரவ பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இளம் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் கியூ-ஷொப் திட்டத்தின் ஆரம்ப விழா, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் (19.11.2020) வியாழக்கிழமை இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்றது. அதன்போது முதலாவது கியூ-ஷொப் விற்பனை நிலையம் கௌரவ பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது. உயர் தரத்திலான பொதுத்துறை மற்றும் உள்ளூர் தனியார் உற்பத்தியாளர்களின்...

யுவதியின் பொறுப்பற்ற செயல் – மூன்று குடும்பம் தனிமைப்படுத்தலில்!!

சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி செயற்பட்ட யுவதியினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த யுவதியொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளைக்கு சென்று திரும்பியுள்ளார். அதனால் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தி இருந்தனர். அந்நிலையில் யுவதி அறிவுறுத்தல்களை மீறி நேற்று முன்தினம்...

யாழ்.பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கு திறப்பு

யாழ்.பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு துணைவேந்தரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எழுந்துள்ள கொவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் திறப்பு விழா இடம்பெற்றது. தற்போதைய துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமாகிய பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட...

மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை!!

மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே எதிர்வரும் நவம்பர் 27ஆம்...

பேனாவை பயன்படுத்தும்போது கவனம் தேவை – பொலிஸாரின் எச்சரிக்கை

வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யமுடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் சொந்த பேனாவை எடுத்துச் சென்று இவ்வாறு பயன்படுத்துவது...

நவம்பர் 23ஆம் திகதி 6-13ஆம் தரங்களுக்கு பாடசாலை ஆரம்பம்!!!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் முதல் கட்டமாக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2020-11-18 அன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை வணக்கம், இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்கள...

2024 இற்குள் அனைவருக்கும் நீரைப் பெற்றுக்கொடுக்க திட்டம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் நீரை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றையதினம் (2020.11.18) குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கௌரவ பிரதமர் முதலில் நினைவு...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய திட்டத்திற்கான பணிகள் ஆரம்பம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.11.18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முனையம் இரண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் விமான நிலைய விமான போக்குவரத்து (ஸ்ரீ லங்கா) தனியார் நிறுவனம் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள...
Loading posts...

All posts loaded

No more posts