Ad Widget

மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சர்!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி...

வடக்கில் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கோரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாணத்தினுள், கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் சிறப்பு சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய கடலோரப் பாதுகாப்பினையும் கடந்து யாராவது...
Ad Widget

யாழில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை!!

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்படுகின்ற வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ். மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மாவட்டங்களுக்கு...

சுகாதாரப் பிரிவு பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

சுவாச கோளாறினால் அவதியுறும் நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சுவாச கோளாறு உள்ள நோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27வயது இளைஞரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அசேல குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே தற்கொலை...

குறிகாட்டுவான் பஸ்ஸில் தொற்றாளர்கள் பயணம்! – கூடப் பயணித்தோருக்கு முக்கிய அறிவிப்பு!!

கொழும்பில் இருந்து இருந்து வந்த கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவானுக்குச் சென்ற பஸ்ஸில் பயணித்துள்ளனர். அந்த பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து புறப்பட்ட தொற்றார்கள், மறுநாள் அதிகாலை 26ஆம் திகதி...

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பரிசீலனை!!

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு இந்தவாரம் முக்கிய கூட்டத்தை நடத்தவுள்ளது. மேல் மாகாணம், குருணாகல் நகரம், குலியாபிட்டி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பகுதிகளுக்கு நவம்பர் 09 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதியை கல்வி...

கோவிட்-19 நோய் தொற்றிலிருந்து விடுபட இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடு – பிரதமர்

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் நாடுமுழுவதும் இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய,...

கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம்!

கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னர் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிப்பொன்றின் மூலம் சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொரோனா தொற்று தொடர்பாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவானது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 21ஆவது மரணம் பதிவாகியுள்ளது. வெலிசற மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர், இரத்த அழுத்தம் மற்றும் சுவாச அமைப்பு நோய்த் தொற்றுகள் நிலைமையின் காரணமாக கடந்த 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில்...

யாழ். பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்கள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார் மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்த வைத்தியத் துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே முன்வைக்கப்பட்டன. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்...

மாவட்டங்களுக்கு இடையில் பயணத் தடை: ஜனாதிபதி

மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்காமல் கொரோனா பரவலைத் தடுக்கும் பல அறிவிப்புக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மக்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்களை தங்கள்...

கொரோனா தொற்றாளர்களுடன் பேருந்தில் யாழிற்கு பயணித்த ஆறுபேர் தலைமறைவு!

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து தலைமறைவாகியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் ஆறு பேரையும்...