. October 14, 2020 – Jaffna Journal

மேலும் 17 பேருக்கு கோரோனா; தேசிய வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் தொற்று!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கோரோனா பரவல் தொடர்சியில் மேலும் 17 பேர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவலை இராணுவத் தளபதி தெரிவித்தார். அவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள். ஏனைய 12 பேர் மினுவாங்கொட ஆடைத்... Read more »

பொது போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு!

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறு பயணிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் குறித்த வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து... Read more »

யாழில் ஐந்நூறு குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போதைய கொரோனா நிலைவரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,... Read more »

வடக்கில் கோவிட் -19 நோயாளர்களுக்கு சிறப்பு வைத்தியசாலை அமைக்க இராணுவம் தயார் நிலையில்!!

கோவிட் -19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க வடக்கு மாகாணத்தில் சிறப்பு வைத்தியசாலையை அமைக்க இராணுவம் தயாராக உள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிறப்பு வைத்தியசாலையை தயார்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

21 மாவட்டங்களில் கொரோனோ அச்சுறுத்தல்; இன்னும் சமூகப்பரவல் ஏற்படவில்லை!!

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொவிட்-19 கொத்தணி 21 மாவட்டங்களில் பரவியுள்ளது. இவ்வாறு 21 மாவட்டங்களில் பரவியுள்ள போதிலும் தொற்று மூலம் இனங்காணப்படுவதால் இன்னும் சமூகப்பரவல் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார். கொழும்பில் மாத்திரம் மினுவாங்கொடை... Read more »

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மாதாந்த புலமைப்பரிசில் நிதியை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று 2020.10.13 அறிவுறுத்தியுள்ளார். டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 296ஆவது நிர்வாக சபை... Read more »

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு

இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை நேற்று 2020.10.13 அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது.... Read more »

யாழ்.மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

மணிவண்ணன் ஆதரவு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரின் இறுதி முடிவைக் கேட்டு முன்னணி கடிதம்

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் தொடர்பைப் பேணி வரும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சிலரிடம் அவர்களின் இறுதித் தெரிவினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இந்தத் தகவலை சட்டத்தரணி மணிவண்ணனுடன் சேர்ந்து இயங்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் தமிழ் தேசிய... Read more »

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு: நள்ளிரவு முதல் பொருட்களின் விலை குறைகிறது!

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய பருப்பு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின்மீன்), பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கமையநேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்... Read more »

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் ஒன்பது பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி, இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 285 பேருக்கு கொரோனா பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த பரிசோதனைகள், யாழ். போதனா... Read more »

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது... Read more »