12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் மந்த்ரா பேடி!

பிரபல வட இந்திய நடிகை மந்த்ரா பேடி. சிம்பு நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான ‘மன்மதன்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தவர் 12-ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

manthra_bedi

இசையமைப்பாளர் , நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை சுரபி நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் ‘அடங்காதே’. அறிமுக இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி இயக்க உள்ள இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில்தான் காவல்துறை அதிகாரி வேடத்தில் மந்த்ரா பேடி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து படக்குழுவினர் தெரிவித்ததாவது:

அந்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் ஒரு வட இந்தியர் என்பதால் மந்த்ரா பேடி தேர்வு செய்யப்பட்டார். அவரைத் தவிர வேறு யாரையும் இயக்குனரால் எண்ணவே முடியவில்லை. இது குறித்து அவரைத் தொடபு கொண்ட பொழுது மந்த்ரா கூட ஆச்சர்யம் அடைந்தார்.

அதே நேரத்தில் இந்த படத்தில் மந்த்ரா சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கவில்லை. திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அக்டோபரில் துவங்க உள்ளது.

Recommended For You

About the Author: Editor