Ad Widget

வடமாகாண சபையின் இணையத்தளம்

www.np.gov.lk என்ற முகவரியூடான வடமாகாணத்திற்கான இணையத்தளம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

np-gov-lk

இந்த இணையத்தளத்தில் வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் அலுவலகம், பிரதம செயலாளர் அலுவலகம், கல்வி, கலை பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம், விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வணிகத்துறை அமைச்சின் அலுவலகம், சுகாதார அமைச்சின் அலுவலம் ஆகியவற்றின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஐயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண சபையின் பேரவைத்தலைவர் எஸ்.கிருஸ்ணமூர்த்தி வடமாகாண அமைச்சுக்களில் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts