Ad Widget

லண்டன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு!!

லண்டன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் மீது ஏன் நாம் தாக்குதல் நடத்தக்கூடாது என புடின் ஆதரவாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.

புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஓலாஃப் ஷோல்ஸ், ரிஷி சுனக் ஆகிய தலைவர்களையும் ஆபாச வார்த்தைகளால் மோசமாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யப் போரில் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு, ஆயுத உதவிகளை வழங்கி வரும் நிலையில் புடின் ஆதரவாளரின் இந்த கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Posts