Ad Widget

ரியோ பரா ஒலிம்பிக் : இலங்கைக்கு முதல் பதக்கம்

2016 ரியோ பராஒலிம்பிக் ​போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில் இலங்கை வீரர், தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

rio

அவர் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தினேஷ் பிரியந்த ஹேரத்தின் தனிப்பட்ட சாதனையும் ஆகும்.

இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தை இந்தியாவும், வெள்ளிப் பதக்கத்தை சீனாவும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts