Ad Widget

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த றொஹான் டயஸ், நேற்று வெள்ளிக்கிழமை (05) முதல் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக, கொழும்பு தலைமை பொலிஸ் திணைக்களத்தில் இதுவரை காலமாக பணியாற்றி வந்த வைத்திய அலங்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதி பொலிஸ் மா அதிபர், இன்று சனிக்கிழமை (06) கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts