Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் பிரிவு திறப்பு

Jaffna Teaching Hospitalயாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் ஆய்வு பிரிவு இன்று திறந்துவைக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் நிபுணர் டாக்டர் அஜந்தா கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தேசிய வைத்தியசாலை சிரேஷ்ட நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ரஞ்சனி ஹமகே கலந்துகொண்டு நரம்பியல் பிரிவினை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, நாக விகாரையின் விகாராதிபதி விமலதேரர், நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம், மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts