Ad Widget

யாழ்ப்பாணத்தில் அச்சத்துடனே வாழ்கிறோம்! சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்!! – நயினை விகாராதிபதி

யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்.” – இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கைகோர்த்தன. இந்த நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நான் யாழ்ப்பாணத்தில் 42 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். அங்குள்ள நிலைமை என்ன என்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியும். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.

ஈழம் முத்திரையிடப்பட்ட மேடையில் இருந்துதான் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். விஜயகலா மகேஸ்வரனும் இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களை எல்லாம் அகற்றுவதாக விஜயகலா கூறுகின்றார்.

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலிருந்து நயினாதீவுக்கு வரும் யாத்திரிகர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களின் வாகனங்கள் சேதமாக்கப்படுகின்றன. நாம் மிகவும் அச்சத்துடன் வாழவேண்டியுள்ளது. இவ்வாறான பாரிய விடயங்கள் அங்கு நடக்கின்றன.

அச்சத்தின் மத்தியில் வாழும் நிலைமையை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க சிங்களவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட்17ஆம் திகதி வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்” – என்றார்.

Related Posts