Ad Widget

முதல் இன்னிங்சில் இலங்கை 504 ஓட்டங்கள் விளாசல்

சிம்பாபேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 504 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

CRICKET-ZIM-SRI

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கைக்கு தனஞ்சயடி சில்வா 127 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதனையடுத்து 504 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்துள்ளது.

தனது முதலாவது இன்னிங்சிற்க்காக துடுப்பெடுத்தாடும் சிம்பாவே அணி இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவின் போது 126 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts