Ad Widget

பொலிஸாரை ஏசியவர் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பகுதியில் மதுபோதையில் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதுடன் பொலிஸாரை ஏசிய சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், செவ்வாய்க்கிழமை(04) உத்தரவிட்டார்.

மேற்படி நபர் சந்தேகநபர் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்தமை மற்றும் தட்டிக்கேட்ட பொலிஸாரை ஏசியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் திங்கட்கிழமை (03) பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அனுமதியின்றி மதுபானம் விற்றவருக்கு பிணை

கிளிநொச்சிப் பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை 75 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் அனுமதியளித்தார்.

திங்கட்கிழமை (03) பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி நபரிடமிருந்து 3.5 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டது.

வீதி ஒழுங்கை மீறயவர்களுக்கு அபராதம்

கிளிநொச்சி ஏ – 9 வீதியில் வீதி ஒழுங்குகளை மீறிய 3 வாகனங்களின் சாரதிகளுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் தீர்ப்பளித்தார்.

கவனயீனமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்கு தலா 1000 ரூபாய் அபராதமும், காப்புறுதிப்பத்திரமின்றி மோட்டார் செலுத்தியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆபத்தான முறையில் மிதிபலகையில் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து சாரதிக்கு ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் நீதவான் விதித்தார்.

இவர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் கிளிநொச்சி ஏ – 9 வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts