பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்தை கண்டித்து சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக வடக்கு கிழக்கில் நீதிமன்ற செயற்பாடுகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.