Ad Widget

சொந்ததேவைகளுக்கே ஜனாதிபதி கூட்டமைப்பினருக்கு அவசியப்படுகிறார் – மாநகர சபை முதல்வர்

yokeswarey-mayarதெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு மாத்திரமே ஜனாதிபதி கூடாது ஆனால் சொந்த தேவைகளுக்கு அவசியமானர் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களது பணத்தில் வாகனம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழும் முதல்வர் அரச பணத்தில் வாகனம் பெற்றுக் கொள்ளும் எம்மைப் பற்றி கதைக்கும் அதிகாரம் இல்லை என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

எனினும் இது தேவையற்ற விடயம் என்பதுடன் கண்டிக்கத்தக்கதும் ஆகும். மேலும் எனக்கு வழங்கப்பட்ட வாகனம் 78 இலட்சம் என்றும் தாங்கள் கொள்வனவு செய்யவுள்ள வாகனம் 58 இலட்சம் என்றும் அவைத்தலைவர் தெரிவித்தார். இருப்பினும் எனது வாகனமும் 58 இலட்சம் தான்.

எனது முதல்வாகனம் விபத்துக்குள்ளானது உண்மைதான். அதற்கான காப்புறுதியாக 55இலட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.மீதமாக 3 இலட்சம் ரூபா சேர்த்தே தற்போதுள்ள வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது.

இதற்கான ஆதரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. எனினும் தெரிவுக்குழுவிற்கு செல்வதற்கு மாத்திரம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கூடாது ஆனால் சொந்த தேவைகளுக்கு அவசியமானவர்.

அத்துடன் அண்மையில் 22 உறுப்பினர்களும் ஜனாதிபதியிடம் சென்று வாகனக் கொள்வனவுக்கு கையெழுத்திட்டு வந்துள்ளனர். இதையே நான் கூறினேனே தவிர வரிவிலக்களிக்கப்பட்ட வாகனத்தைக் கூறவில்லை என்றார்.

Related Posts