Ad Widget

சிங்கள பேரினாவாத அரசிடமிருந்து விடுதலை பெறவேண்டும்: மாவை

mavai mp inசிங்களப் பேரினவாத அரசுகளிடமிருந்து விடுதலை பெறுகின்ற ஒரு இனமாக நாங்கள் மாற வேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகத்தில் புதன்கிழமை (16) நடந்த மக்கள் சந்திப்பின்போதே மாவை சேனாதிராசா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘பௌத்த பேரினவாத அரசாங்கங்களினால் எமது வரலாற்று அடையாளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக சந்தித்த துன்ப, துயரங்களை விட கடந்த 4 ஆண்டுகளில் கொடூரமான காலகட்டங்களை எதிர்கொண்டுள்ளோம்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் அடக்குமுறைக்குள்ளும் அரச அடிவருடிகளின் ஆதிக்கத்தினுள்ளும் இராணுவ பயங்கரங்கவாதிகளின் அச்சுறுத்தலின் மத்தியிலும் எமது மக்கள் இத்தேர்தலைத் துணிகரமாக எதிர்கொண்டு சரியான பதிலடியினை அரசிற்கு வழங்கியுள்ளனர்.

அத்துடன், ஒட்டுமொத்த தமிழர்களும் இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டபைபிற்கு அமோக ஆதரவினை வழங்கி சர்வதேச சமூகத்திற்கு தமது ஒற்றுமையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் தொடர்ந்து எமது ஜனநாயகப் போராட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவினையும் வழங்கவேண்டும் என அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபைக் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, சு.சுகிர்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Posts