கொழும்பு சொகுசு பேருந்து மர்ம நபர்களால் தீக்கிரை

கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் சொகுசு பேருந்தொன்று இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சிவன் கோயிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தே இவ்வாறு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். எனினும் அதன்போது பேருந்து முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நாசகாரச் செயலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வகையில் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2ஆம் திகதி நள்ளிரவு திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றும் இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts