Ad Widget

எரிபொருள் விலை குறையவில்லை – நுகர்வோர் அதிருப்தி

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், இன்னும் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 157 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் ஒருலீற்றர் 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதோடு, 165 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒருலீற்றர் 158 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் போஸ்டார் வகை டீசல் ஒரு லீற்றர் 140 ரூபாவில் இருந்து 133 ரூபாவாகவும், ஒடோ டீசல் ஒரு லீற்றர் 118 ரூபாவில் இருந்து 111 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருலீற்றர் மண்ணெண்ணெய் 86 ரூபாவில் இருந்து 81 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் விலை மாற்றத்திற்கு ஏற்ப எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற முடியவில்லை என நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts