மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக சூழலில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
அதில் “இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் ஒழிக்கும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம்”, ” மாலேப திருட்டு கல்விக் கடையை காக்கும் மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்” என என பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.


