Ad Widget

இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!

இன்று (09) சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினமாகும்.கடந்த 2004 ஆம் ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தின் போது டிசம்பர் 9ஆம் திகதி ஊழல் எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இவ்வாண்டு ஊழல் எதிர்ப்புத் தினமானது ‘ஊழல் சங்கிலியை உடைப்போம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்க ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் அலுவலகம் தீர்மானித்துள்ளது.

ஊழல் தொடர்பான விழிப்புணர்வு வகிபங்கு எதிர்ப்பு மற்றும் தடுப்பு என்பவற்றை நோக்காக கொண்டு அனுஷ்டிக்கப்படவுள்ள இத்தினத்திற்கான உடன்படிக்கை கடந்த 2015 ஆம் உள்வாங்கப்பட்டது.

ஊழலானது நாடுகளின் சமூக அரசியல் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன் நிறுவனங்களின் ஜனநாயகத்தன்மையை இல்லாமல் செய்யும். மேலும் பொருளாதார அபிவிருத்தியை மந்தநிலைக்கு கொண்டு செல்லும். இதனைத் தடுக்கும் நோக்கில் ஐ.நா ஊழல் எதிர்ப்புத்தினத்தை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts