Ad Widget

இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஐந்தாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.

177 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

Related Posts