இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது இலங்கை. நாசோவில் நடைபெற்ற சிவில் விமானப் பேச்சுக்களில் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உடன்பாட்டுக்கமைய, இந்தியாவின் ஆறு மெட்றோ விமானநிலையங்களுக்கு இலங்கையினால் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ளமுடியும்.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய விமான நிலையங்களுக்கு கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள இந்த உடன்பாட்டில் இடமளிக்கப்பட்டுள்ளது.
106 நாடுகள் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில் 17 நாடுகளுடன் திறந்த வான் உடன்படிக்கை தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது.
இதில் இலங்கை உட்பட 12 நாடுகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.