Ad Widget

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்கு 413

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 237 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஒட்டங்களை நிர்ணயித்துள்ளது.

CRICKET-SRI-AUS

இந்த நிலையில் நேற்றய ஆட்டநேர முடிவின்போது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 64 ஒட்டங்களையும் அணித்தலைவர் மெத்தியுஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மிச்சல் ஸ்டார்க் 50 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இன்றைய தினம் ஆட்டத்தின் மூன்றாவது நாள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Related Posts