விக்னேஸ்வரன் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

vicknewaran-tnaவட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

எதிர்வரும் 11ம் திகதி ஏனைய மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாணசபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.