ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்த விக்ரம்!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் இருமுகன். கடந்த வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்த இப்படத்திற்கு இரண்டுவிதமான விமர்சனங்களும் வெளியாகின. ஆனபோதும் படத்தின் வசூலுக்கு எந்தவித பங்கமும் ஏற்படவில்லை என்கிறார்கள் அப்படக்குழுவினர்.

rajini-vijay-vikram

அதோடு, நேற்று இருமுகன் படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டும் சென்னையில் நடைபெற்றது. அப்போது நேற்று வரை தமிழகத்தில் மட்டும் 29.5 கோடி வசூலித்துள்ள இருமுகன், உலக அளவில் ரூ. 66 கோடி வசூலித்திருப்பதாக அறிவித்தனர்.

அது மட்டுமின்றி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் இந்த ஆண்டு வெளியான படங்களில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி படங்களுக்கு அடுத்தபடியாக இருமுகன்தான் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் ஒரு தகவலை தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor