போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளமை தொடர்பில், பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட இயங்குநரொருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற ஆதாரங்களை இலண்டனிலுள்ள சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.
இதில், இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இசைப்பிரியாவை மையப்படுத்தி, இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது.
இந்திய இயக்குநரான கணேசன் என்பவரே ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய மத்திய திரைப்படத் தணிக்கைக்குழு, கடந்த மே மாதம் சான்றிதழ் வழங்க மறுத்தது.
எவ்வாறாயினும், இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவின் இந்த தீர்மானத்துக்கு இயக்குநர் கே. கணேசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.