பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வட மாகாணத்தில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மொழி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என, அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.