புத்தூர் கொலை சம்பவத்தில் தேடப்பட்டவரே தமிழகத்திற்கு தப்பிச் சென்றார்!

தமிழகத்தில் நேற்றையதினம் கைதான இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு கண்ணாடிஇழை படகுமூலம் சென்ற இரண்டு இளைஞர்கள், சுங்கத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் பிரதாப், நாகேஸ் என தம்மை கூறியதுடன், மன்னார், அடம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

மன்னாரிலிருந்து அவர்கள் சட்டவிரோதமாக தப்பி சென்றிருந்தனர்.

அவர்களின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, அவர்கள் பற்றிய பல தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் யாழ்ப்பாணம், புத்தூர் வீரவாணியை சேர்ந்த யோகநாதன் பிரதாபன், விஜயராசா நாகேஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது.

வீரவாணி பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் கடந்த மாதம் 28ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் யோகநாதன் பிரதாபன் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, அவர்கள் இன்று தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor