கௌதம் மேனன், சிம்பு சமரசம்

வெறும் கையால் முழம்போடுவது என்ற சொல்வார்கள். இது இயக்குநர் கௌதம் மேனனுக்குத்தான் மிகவும் பொருந்தும். கையில்போதிய பணம் இல்லாமலேயே முன்னணி ஹீரோக்களை வைத்து படத்தைத் தொடங்கிவிடுவார். ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ஹீரோக்கள் ஒருகட்டத்தில் சம்பளத்தைக் கேட்கும்போது, படப்பிடிப்பையே நிறுத்திவிடுவார். இப்படித்தான், கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வளர்ந்த வந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் பாதியோடு நின்றுபோனது.

gowtham-simbu

இந்தப் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ‘தள்ளிப்போகாதே…’ பாடல் யுடியூபில் வெளியாகி, கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் அதை ட்யூப்பில் பார்வையிட்டுள்ளனர். கௌதம் சிம்பு இடையே ஏற்பட்ட பணப்பஞ்சாயத்தினால் இப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெறாமலே இருந்தது.

இந்த ஒரு பாடலைத் தவிர மற்ற படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால், தள்ளிப்போகாதே பாடல் இல்லாமலேயே படத்தை ரிலீஸ் செய்துவிடலாமா என யோசிக்க ஆரம்பித்தார் கௌதம் மேனன். இதை கௌதம் மேனனே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்த பஞ்சாயத்தினால் தள்ளிப்போகாதே பாடல் படத்தில் இடம்பெறாதோ என ரசிகர்கள் சிம்புவின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், கௌதம் மேனன் சிம்புவுக்கிடையே இருந்த பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு இப்போது ‘தள்ளிப்போகாதே…’ பாடல் படப்பிடிப்பிற்காக பாங்காக் பறக்கவிருக்கிறது ‘அச்சம் என்பது மடமையடா’ படக்குழு. இந்தப்பாடல்காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்னர் படம் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படுமாம். அனேகமாக தீபாவளி அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor