கிணற்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷாலினி (வயது 20) மற்றும் தனூஜா (வயது 22) என்ற இரு சகோதரிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு குறித்த சகோதரிகளின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்று இரவு தனிமையிலேயே வீட்டில் இருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நீதிவானின் மரண விசாரணைகளை அடுத்து, இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சகோதரிகள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது பற்றி இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பலாலி பொலிஸார் குறிப்பிட்டனர்.