உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த இரண்டு அரசியல் கைதிகள் சுகயீனம் அடைந்ததன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதியரசன் சுலக்ஷன் மற்றும் ராசத்துறை திருவருள் என்ற இரு கைதிகளே இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உண்ணாவிரதம் மேற்கொண்ட கணேசன் தர்ஸன் என்ற கைதி மரண தண்டனை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அநுராதபுர சிறைச்சாலையில் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor