Ad Widget

இரணைமடு குளத்தின் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட பொறியியலாளர் மரணம்

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 03.10.2016 திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல் துறையினர் தெரிவித்தனர்.

அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய கனகராசா கோபிநாத் என்ற பொறியியலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts