வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை இன்று கொழும்பிலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன நிலங்களை பிடிக்கும் பேராசை மகிந்த அரசிடம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார்.
வலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது எனவே மக்களின் காணிகள் அவர்களிடம் வழங்கப்பட வேண்டும். இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜனாதிபதி நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட இதனைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது அத்துடன் நீதிமன்றமும் மக்களுடைய நிலங்கள் அவர்களிடம் வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது,
அத்துடன் பலாலி விமான நிலையத்தின் பாதுகாப்பை காரணம் கட்டி மக்களிம் காணிகளை அபகரிக்க முடியாது அத்துடன் பலாலி விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு மக்களின் காணிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை இன்று கொழும்பிலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன நிலங்களை பிடிக்கும் பேராசை மகிந்த அரசிடம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.