யுத்த காலத்தில் இந்தியாவின் தமிழகத்துக்கு தப்பிச் சென்ற 90 தமிழர்கள் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான இரு விமானங்களில் இவர்கள் நாட்டு வருகை தந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் ஆவர். இவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.