அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை

தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க ஆர்வம் காட்டியுள்ளார்.

brunei-princess-ajith

உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான அரண்மனை புருனே நாட்டில்தான் உள்ளது. புருனே மன்னர்களும், இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கடந்த வாரம் புருனே நாட்டின் அரண்மனையில் நடைபெற்ற உலகின் வைர முதலாளிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த விருந்தில் பல நாட்டைச் சேர்ந்த குத்துப்பாடல்கள் இசையமைக்கப்பட்டு எல்லோரும் நடனமாடினர். அப்போது ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடலும் இசையமைக்கப்பட்டது. அதைக்கேட்ட அனைவரும் உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

அந்த பாடலை கேட்டு அசந்துபோன புருனே நாட்டு இளவரசி, தனது மெய்க்காப்பாளர்களை அழைத்து அந்த பாடல் பற்றிய விவரங்களை கேட்டறிந்தாராம். அதைத் தொடர்ந்து அவர்கள், அஜித்தின் புகைப்படங்கள், அஜித் நடித்த முக்கியமான படங்கள் ஆகியவற்றை சேகரித்து புருனே நாட்டு இளவரசியிடம் ஒப்படைத்துள்ளார்கள். அந்த படங்கள் அனைத்தையும் மூன்றே நாட்களில் பார்த்து முடித்துவிட்டாராம் இளவரசி.

இதையெல்லாம் பார்த்து அசந்த போன புருனே நாட்டு இளவரசி, என்ன அழகு, என்ன கம்பீரம், சிரிக்கும்போது அப்படியே மனதை அள்ளுகிறார். அவரை சந்திக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். அவர் வர சம்மதித்தால் உலகமே வியக்க விருந்து ஏற்பாடு செய்யுங்கள் என்று தனது மெய்க்காப்பாளர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் இளவரசி.

மெய்க்காப்பாளர்களும் இளவரசியின் கட்டளையை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம்.

Recommended For You

About the Author: Editor