தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்களுக்கான தெளிவுபடுத்தல் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் எதிர்வரும் 12 ஆம் திகதி (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
களுவாஞ்சிக்குடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமை, எதிர்கால நடவடிக்கைகள், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.