16 ஆயிரத்து 800 பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கும் தேசியத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரத்து 253 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

15 பிரதேச செயலர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நியமனம் பெற்றவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கும், வடமாகாண சபைக்கும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.