வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு சென்றனர் ஒரு தொகுதி அகதிகள்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர், நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர்.

சுயவிருப்பத்தின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவும் அதற்கு முன்தினமும் 6 பேர் இவ்வாறு நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர்.

அதற்கமைய நேற்று முந்தினம் ஐவரும் நேற்று இரவு ஒருவரும் சென்றுள்ளதாகவும் மேலும் 9பேர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 87பேர் குறித்த முகாமில் இருப்பதாகவும் புனர்வாழ்வு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த 113பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அவர்களில் 20பேர் அண்மையில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு சென்றிருந்தனர்.

வவுனியாவில் குறித்த அகதிகளை தங்கவைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புக்கள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts