போரை வழி நடத்திய தளபதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னை எண்ணுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 850ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட கொட்டகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தைச் சேர்ந்த தலைவர்கள் அநதணர்கள் பங்குபற்றுகின்ற யாகம் ஒன்றினை 28ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளோம். குறிப்பாக தமிழர்களின் தீர்வுக்காகவும் காணாமல்போன உறவுகளுற்கு கிடைத்த முதல் வெற்றியினை தக்க வைப்பதற்காகவும் யாகம் மற்றும் பஜனையும் இடம்பெறவுள்ளது.
28ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து 11.30 மணி வரை யாகம் நடைபெறவுள்ளதால் அனைத்து தமிழர்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தாய்மார்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடத்தி தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் என்று உரையாற்றியிருந்தார்.
இவ்வுரையானது தமிழர்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலேயும் ஒரு நகைச்சுவையான விடயமாக பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்குவதுதான் தமிழர்களுக்கான உண்மையான தீர்வாக அமையும்” என மேலும் தெரிவித்தார்.