விபத்தில் மூவர் பலி!! A9 வீதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு மாணவர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எரந்த இஷான் திலகரத்ன -14 வயது, இமந்த பசிந்து ஹேரத் -15 வயது, அச்சின்ன லக்சான் -16 வயது ஆகிய மாணவர்களே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts